ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளா்களுடன் 46 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் இரண்டாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றார். அவர் 33450வாக்குகள் பெற்றுள்ளார். நாம தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6550 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதனிடையே வாக்கு எண்னிக்கை நடைபெறும் மையத்தில் நாம தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை என போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.