மகா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமத்தில், சாதுக்கள், பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தருகின்றனர். இதுவரை, 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 26ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், இந்த எண்ணிக்கை
50 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.