கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியரை சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புஷ்பராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தாராபுரத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஆட்டோவை புஷ்பராஜ் முந்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோவில் இருந்த முகமது ஆசிக் மற்றும் அவரது குடும்பத்தினர், புஷ்பராஜை பின்தொடர்ந்து சென்று பெட்ரோல் பங்க்கில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து புஷ்பராஜ் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.