ஜப்பானில் பனி குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்த குளியலிடுவதை திரளான சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர்.
ஜப்பானில் குளிர் காலங்களின்போது, பனிக்குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.
ஜப்பானில் தற்போது குளிர்காலம் நிலவுவதால், வெந்நீர் ஊற்றுகளில், பனிக்குரங்குகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன. இதனை திரளான சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.