பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மகன் படிப்புக்கு வாங்கிய கடனை கட்டிய பிறகே சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை வழங்க முடியும் என வங்கி மேலாளர் கூறியதால், பெண் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை – செல்லம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுதாகர் பொறியியல் கல்வி பயில கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2018 ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் பெற்றார்.
தற்போது வட்டியுடன் 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயில், இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டியுள்ளார். இந்நிலையில், அதே வங்கியில் சேமித்து வைத்துள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அவசர தேவைக்காக எடுக்க செல்லம்மாள் சென்றுள்ளார்.
ஆனால், மகன் செலுத்த வேண்டிய கல்விக் கடனை செலுத்தினால் மட்டுமே உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை வழங்க முடியுமென வங்கி மேலாளர் ராகுல் கூறியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த செல்லம்மாள், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.