மணப்பாறையில் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம், அந்த பள்ளி தாளாளரான சுதா என்பவரின் கணவர் வசந்த குமார், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 5 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிப்ரவரி 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாளாளரின் கணவரான வசந்த குமாரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.