உத்தரப்பிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி பெற்றார்.
அயோத்தி மாவட்டத்தில் உள்ள மில்கிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் சந்திரபானு பஸ்வானும், சமாஜ்வாதி கட்சி சார்பில் அஜித் பிரசாத்தும் போட்டியிட்டனர். இந்நிலையில் அஜித் பிரசாத்தை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சந்திரபானு பஸ்வான் அமோக வெற்றி பெற்றார்.