கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிறகு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கடுமையான குளிர் நிலவியதால், கடந்த சில வாரங்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த சூழலில், வார விடுமுறையொட்டி அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு இன்று வருகை தந்தனர்.
கோரக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் சதுக்கம், பைன் மர காடுகள், தூண் பாறை, குணா குகை, ஆகிய பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.