மகாராஷ்டிராவில் மணமகனின் CIBIL SCORE குறைவாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முர்டிசாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவிருந்தது.
திருமணத்திற்கு முன் மணமகனின் நிதிநிலை குறித்து அறியவிரும்பிய பெண்ணின் உறவினர், மணமகனின் CIBIL SCORE-ஐ செக் செய்துள்ளார்.
அப்போது மணமகனின் CIBIL SCORE மிகவும் குறைவாக இருந்ததுடன், அவர் அதிக கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியில் இருந்தது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது.
அதனால் மணப்பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருடன் நடைபெறவிருந்த திருமணத்தை பெண் வீட்டார் உடனடியாக நிறுத்தியுள்ளனர்.