நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மெக்சிகோ பெண்ணை காதலித்து கரம் பிடித்த நிலையில், இந்து முறைப்படி திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், மெக்சிகோவில் தகவல் தொழில்நுட்ப இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
அந்நாட்டைச் சேர்ந்த அசுவாணி லோபெஸ் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, இசக்கி முத்து தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். முதலில், தயக்கம் காட்டிய அவரது பெற்றோர்கள் பின்னர் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, மெக்சிகோவில் ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இசக்கிமுத்துவின் சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து இருவரும் பாபநாசநாதர் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்தனர்.