டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
டெல்லியின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்று உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.