பொய் வாக்குறுதிகள் அளிப்பவர்களுக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமித்ஷா, டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், டெல்லி மக்கள் இதயத்தில் பிரதமர் மோடி உள்ளதாகவும் கூறினார்.