டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் டெல்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
டெல்லி துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க தலைமைச் செயலகம் பூட்டப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகத்துறையின் அனுமதியின்றி யாரும் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.