டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற ராகுல் காந்தி உதவியுள்ளார் என பாரத ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.டி.ராமராவ் கிண்டலடித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் போட்டியிட்ட எந்த இடத்திலும் காங்கிரஸ் முன்னிலை பெறாத நிலையில், பல தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு வெகுவாக குறைந்துள்ளது.
இதனை சுட்டிக் காட்டியே ராகுல் காந்தியை, கே.டி.ராமராவ் கிண்டலடித்துள்ளார். ராகுல் காந்தியை கே.டி.ஆர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2023-ம் ஆண்டு நடந்த மாநாடு ஒன்றில், ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சொத்து என கிண்டலடித்த கே.டி.ஆர், காங்கிரஸ் பாஜகவை தோற்கடிக்க இயலாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.