இந்தியாவிடம் இருந்து 3,950 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான இந்தோனேசியாவின் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்ததை எளிதாக்குவதற்காக இந்தோனேசியாவுக்கு, இந்தியா கடன் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் 290 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்க கூடிய வலிமையான பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கிய இரண்டாவது ஆசியான் உறுப்பு நாடாக இந்தோனேசியா இருக்கும்.
முன்னதாக 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் இந்தியாவிடமிருந்து 3,292 கோடி ரூபாய்க்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்கியது. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தென் சீனக் கடலின் தெற்குப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.