டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு, கூட்டணிக்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தமது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் மீது டெல்லி மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும்,இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோல, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் பக்கத்தில், ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, டெல்லியில் கிடைத்த இந்த வெற்றி, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றி, தலைநகர் டெல்லியின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் செழிப்புக்கான ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.