டெல்லி தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது.
தொடர்ந்து டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பாஜக-வின் வெற்றியை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.