மணப்பாறை அருகே வீடு வீடாகச் சென்று மதப் பிரச்சாரம் சார்ந்த துண்டு பிரசுரங்கள் வழங்கிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வெள்ளையாம்பட்டி மற்றும் பின்னத்தூர் ஆகிய பகுதிகளில், 20 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்கிய ஒரு குழு, வேன் மற்றும் பதிவு எண் இல்லாத ஆட்டோவில் சென்று, வீடு வீடாக பைபிள் மற்றும் மதப் பிரச்சாரம் சார்ந்த துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
அப்போது அவர்களை சுற்றிவளைத்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், 28 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டார்களா என விசாரணை நடத்தினர்.