பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ஒத்திகை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அருகே மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தூக்கு பாலம் அமைப்பதற்கு கடந்த 2019 -ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்றன.
தூக்கு பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை நிகழ்ச்சி மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்ஸ்சவ் தலைமையில் நடைபெற்றது. பாலத்தில் கப்பல் கடந்து செல்வது, ரயில்கள் இயக்கப்படுவது உள்ளிட்டவற்றிற்கான முன்னோட்டத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.