தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி கேட்ட நிலையில், பதில் அளிக்க முடியாமல் அங்கிருந்து நழுவி சென்றார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி கலந்துகொண்டு இரண்டு அங்கன்வாடி பணியாளர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு சென்றார்.
அப்போது, தேர்தல் அறிக்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை என கனிமொழி எம்.பியிடம் கேட்டனர். அதற்கு பதில் அளிக்காமல் கடந்து சென்றதால் அங்கன்வாடி ஊழியர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.