ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் சில வடமாநிலத்தவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்தி 3 பேரைக் கைது செய்த போலீசார், 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.