பழனி கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம், சரவணப்பொய்கை ஆகிய புனித நதிகளில் நீராடி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தைப்பூசத் தை முன்னிட்டு நாள்தோறும் முருகப்பெருமான் வெள்ளி மயில், தங்கமயில் போன்ற வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன்குளம், சரவணப் பொய்கை போன்ற நதிகளில் புனித நீராடி பழனி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள வருகை புரிந்துள்ளதால் 3 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.