இந்தியா, பிரான்ஸ் இடையேயான வர்த்தகம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபைகளின் தலைவர் கூமர் ஆனந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாரிசில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா – பிரான்ஸ் இடையிலான வர்த்தகம் 15 முதல் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததாகவும், AI உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 20 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இருநாடுகளும், பாதுகாப்பு மற்றும் விண்வெளியை மையமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரான்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், தற்போது பிரான்சிலும் நிறைய இந்திய நிறுவனங்கள் காணப்படுகிறது என குறிப்பிட்டார். மேலும், இந்திய முதலீட்டாளர்களுக்கு பிரான்ஸ் சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாக கூறிய அவர், அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.