டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
டெல்லி ஷாகேத் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்திற்கு எம்ஜிஆர், அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக டெல்லி அலுவலகத்தை திறந்து வைத்தார்.