கொடைக்கானல் பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்றவாறு வண்ண, வண்ண பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அந்த வகையில் பிரைன் பூங்காவில் தைவான் செர்ரி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. மரத்தில் இலைகள் இன்றி ரம்மியமாக பூத்து குலுங்கும் இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.