கடவுள் பக்தி எனக்கு உண்டு என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார்,
தனக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
ஈ. வெ. இராவை அரசியல் ஆதாயத்திற்காக கேவலமாக பேசும் சீமான் மனிதப்பிறவியாகவே இருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது கையில் எலுமிச்சம்பழம் வைத்திருந்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தான் ஈ. வெ. இரா மீது மதிப்பு வைத்திருந்தாலும், கடவுள் பக்தியும் எனக்கு உண்டு என வி. சி. சந்திரகுமார் விளக்கமளித்தார்.