தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகைதந்த வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.
10 கிலோ எடைகொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாய்க்கும், 25 கிலோ எடைகொண்ட ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.