வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்தபோதிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணி துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.