சென்னை முகப்பேர் அருகே தம்பதிகள் போல இருசக்கர வாகனத்தில் வந்து சைக்கிள் திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தம்பதிகள் போல் வந்தவர்கள் சைக்கிள் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனை வைத்து ஜெஜெ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ தேவி மற்றும் முகமது தீன் என்பதும், இருவரும் அவரவர் கணவன், மனைவியை பிரிந்து திருமணம் தாண்டிய உறவில் இருந்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வேறு ஏதேனும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.