தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
அப்போது தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை, பிரசார வியூகங்களை வழங்க பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எப்படியிருக்கும் என பிரஷாந்த் கிஷோரிடம் விஜய் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.