அடுத்த மகா கும்பமேளா ஹரித்வாரில் நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தனது குடும்பத்துடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.