தைப்பூச விழா சிறப்புகள், வரலாறு - சிறப்பு கட்டுரை!
Jul 23, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தைப்பூச விழா சிறப்புகள், வரலாறு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகன் கோயில்களில் லட்சக்கண்க்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூச வரலாறு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தைப்பூச வரலாறு:

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான் ஆவார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான்.

அம்பாள் அளித்த வேலை ஆயுதமாக கொண்டே, தேவர்களுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்தார். அதனால் முருகப்பெருமானை போலவே அவரது வேலுக்கும் தனி சக்தி உண்டு என கூறுகின்றனர்.

அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேலை பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை தந்தருளும் என்பது ஐதீகம்.

தைப்பூச சிறப்புகள்:

பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன், சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணிய திருநாள் தைப்பூசம் ஆகும். ஆகவே தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

தைப்பூச நாளில் வள்ளலார் முக்தி அடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். மேலும் இந்நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும், சிவபெருமான் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

அத்துடன் வாயு பகவானும், வருண பகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு  நடைபயணமாக செல்வது தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.

தைப்பூசத்தன்று கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதாவது கோயிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக ஊர் முழுவதும் அழைத்து வருவர்.

“தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால் ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமண பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஏதேனும் ஒப்பந்தம் செய்தல் போன்ற நற்செயல்களை மேற்கொள்கின்றனர்.

தைப்பூச நாளில் முருகப்பெருமானிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக சென்று அவற்றை முருகனுக்கு செலுத்தி பூஜை செய்வார்கள்.

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.

அகஸ்திய முனிவருக்கு ‘இடும்பன்’ என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான ‘சிவகிரி’, ‘சந்திரகிரி’ என்னும் இரண்டு மலைகள் வழிபாட்டிற்கு தேவைப்படுகிறது கொண்டு வா என்றார்.

குருவின் கட்டளையை ஏற்று இடும்பன், கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டி, அதைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு புறப்படுகிறார்.

இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார் முருகன். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும் என்றும் எண்ணினார்.

இந்த இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் நின்றபோது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அச்சிறுவனோ, இந்த மலை எனக்கே சொந்தம் என்கிறான்.

கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர், முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசிவழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

ஆகையால் வேண்டுதல் நிறைவேறிய பின் முருகனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

தைப்பூச விரதமுறை:

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்வர்.

தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

தைப்பூசத்திருநாளில் வேலுக்கு பூஜை செய்வதும். வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும், வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களை கொடுக்கவல்லது.

இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும், வீட்டில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும், வீட்டிற்கு அருகில் உள்ள முருகப்பெருமான் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தை போக்கி சந்தோஷத்தை பெருக்கி தரும்.

தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் என எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.

தைப்பூச விரத பலன்கள்:

தைப்பூச நாளில் முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது. மேலும் இந்நாளில் விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும்.

தைப்பூசத்தன்று பழனி முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும்.

தைப்பூசத்திருநாளில் பழனி முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்தியும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது.

Tags: thai poosa vratham procedurebrahma muhurtha poojaPalani Murugan templehistory of thai poosamthai pusamthaiTiruchendur Murugan Templethai poosam storythai poosamwhat is thai poosamthai poosam festivalthai poosam historythai poosam pooja at homemurugani templesthai poosam 2025thai poosa vratham2025 thai amavasai
ShareTweetSendShare
Previous Post

தவெகவில் குழந்தைகள் அணி!

Next Post

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

Related News

நான்கு நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies