டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 36 மாணவர்கள் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனர். மறுநாள் அந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி கண்ணணூர் பகுதியை சேர்ந்த டொமினிக் ஜியோஃப்ரே என்ற மாணவர் பங்கேற்றார். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த அவர், தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
அதற்கு, நல்ல உணவு, உறக்கம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அவசியம் எனவும், எந்த துறையில் திறமை இருக்கிறதோ அந்த துறை சார்ந்த அறிவை விரிவாக்கிகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் பதிலளித்ததாக கூறினார்.