தஞ்சை அருகே வங்க தேச பெண்ணை, இளைஞர் ஒருவர் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பேராவூரணி அடுத்த கள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த குலோத்துங்க சோழன் என்பவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவர் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியா ஹானர்ஸ் செகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அனிலா சர்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டார்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் பேராவூரணியில் இந்து மத முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் இருவீட்டார்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.