திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருணாப்பட்டு பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான சண்முகம் மற்றும் இந்திராணி ஆகியோர் மனு அளித்தனர். அதில் தங்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் காவல்துறையில் பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இருவருக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்த நிலையில் தங்களை அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை என புகார் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த நிலையில் இந்திராணி, செய்வதறியாது அழுது கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.