நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தபோது, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் கவனம் செலுத்தியபடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், செல்போனிலேயே முழு கவனத்துடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த போலீசாரும், அலுவலக உதவியாளர்களும் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.