நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி வாகனத்தை இயக்க ஆட்கள் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க மாற்றுத்திறனாளி ஒருவர் வந்திருந்தார். பேட்டரி வாகனம் இல்லாததால் உள்ளே செல்ல முடியாமல் நுழைவு வாயிலேயே காத்திருந்தார்.
இதனை கவனித்த அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று மனு கொடுக்க உதவினர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி வாகனங்களை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.