கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த மாரியப்பன் என்ற கார் ஓட்டுநர், சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மாரியப்பனை சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாரியப்பன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.