வடலூர் தர்மசாலைக்கு 20ஆவது ஆண்டாக 30 டன் காய்கறிகள் மற்றும் அரிசியை இஸ்லாமியர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு 2 ஆயிரத்து 600 கிலோ அரிசி, காய்கறிகள், 5 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அளித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்கள் எனவும், மதநல்லிணக்கத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக வடலூர் தர்மசாலைக்கு உணவு பொருட்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.