பழனி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தான விற்பனை நிலையத்தில் பஞ்சாமிர்த தட்டுப்பாடு நிலவி வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோயிலுக்கு வரும் முருக பக்தர்கள் தேவஸ்தான விற்பனை நிலையத்தில் இருந்து பிரசாதமாக பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வாடிக்கை. இந்நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், தேவஸ்தான விற்பனை நிலையத்தில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் தனியார் விற்பனை நிலையங்களில் இருந்து பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கி செல்லும் நிலையில், அறநிலையத்துறை முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என முருக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.