இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து வருகின்ற 14ஆம் தேதி முதல் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காரைக்கால் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மற்ற மீனவர்களை வருகிற 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் அராஜகத்தை கண்டித்து வரும் 14-ம் முதல் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக காரைக்கால் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.