மதவாத அரசியலை முன்னேடுங்கள் என மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசிய போது, மதவாத அரசியலை முன்னெடுங்கள் என தெரிவித்தார். திமுக எம்.பி. ஆ.ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த போது தமிழச்சி தங்கபாண்டியன் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சை கேட்டதும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த விசிக எம்.பி. ரவிக்குமாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனும் ஏன் இவ்வாறு பேசுகிறார் என குழம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகிறது.