உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து சொந்த ஊர் திரும்பும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அம்மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மகாகும்பமேளாவில் இருந்து திரும்பும் பக்தர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்நாதர் ஆலயத்துக்கும் வருகை புரிவதன் காரணமாக நகரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகாகும்பமேளாவுக்கு அதிக அளவில் பக்தர்கள் சாலை வழியாக வருவதால் சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கிய வாகனங்கள் 2 நாட்களுக்கு மேலாக பிரயாக் ராஜ் வரமுடியாமல் தவிக்கின்றன.