இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன், தனது ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை மகன் அபிஷேக் பச்சனுக்கும், மகள் சுவேதாவுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டதாக அமிதாப்பச்சன் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “எனக்கு பிறகு சொத்துகள் மகன், மகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கப்படும் எனவும், இதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமைகள், எனது மகளுக்கும் இருக்கிறது” என அமிதாப்பாச்சன் கூறியுள்ளார்.