அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் இரு ஜெட் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
காட்ஸ்டேல் விமான நிலையத்திற்கு, டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து வந்த வணிக ஜெட் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்துள்ளது.
இதனால் அந்த ஜெட் விமானம் ஓடுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தனியார் வணிக ஜெட் விமானத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.