திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கம்பரசம் பேட்டை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 8-ம் தேதி திறந்து வைத்தார்.
சுமார் 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்குள் செல்ல பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தைப்பூச விடுமுறையை ஒட்டி பூங்காவிற்கு ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் பூங்காவில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நுழைவு கட்டணத்தை குறைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.