தாட்கோ கடன் மூலம் மீனவர்களுக்கு படகு வலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டிய நபரை குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பழவேற்காட்டில் அரங்கேறி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் 151 மீனவ கிராம மக்களுக்கு படகு மற்றும் மீன் வலைகள் வாங்க பனப்பாக்கம் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்ட நிலையில், அரசு சார்பில் மானியமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் லைட் ஹவுஸ் மீனவப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கொண்டு கூட்டுறவு வங்கி செயலாளர் நான்கரை கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனை ராஜ்கமல் என்பவர் தட்டிக்கேட்ட நிலையில், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன் அவரது வீட்டையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள ராஜ்கமல், தன்னை ஏமாற்றிய நபர்கள் மீதும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.