நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மொழி பயன்பாட்டிற்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சமஸ்கிருத மொழியும் இந்திய மொழிகளில் ஒன்று தான் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குறைந்த அளவிலேயே புழக்கத்தில் இருக்கும் சமஸ்கிருத மொழியை மக்களவையில் பயன்படுத்துவது ஏன் என்றும், சமஸ்கிருத மொழிபெயர்ப்புக்காக மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தி, சமஸ்கிருதம் உட்பட அனைத்து மொழிகளும் இந்திய மொழி தான் என தெரிவித்தார்.
சமஸ்கிருத மொழியுடன் திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.