ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து காயம் காரணமாக பி.வி.சிந்து விலகியுள்ளார்.
ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான பெண்கள் அணியில் பி.வி. சிந்து இடம் பிடித்திருந்தார்.
தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக கவுகாத்தியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
பி.வி. சிந்து வலகியுள்ளதால் பெண்கள் அணிக்கு மாளவிகா பன்சாட் தமைமை ஏற்பார். இவர் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.