சாவா படத்தின் ரிலீஸையொட்டி விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பொற்கோயிலில் வழிபட்டனர்.
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு சாவா என்ற புதிய படம் உருவாகியுள்ளது. சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதனையொட்டி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் விக்கி கௌஷல் – ராஷ்மிகா மந்தனா வழிபாடு செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.